முகப்பு
நாகப்பட்டினம்

திருப்பூரில் மனைவி, மகனை வெட்டிய கட்டட தொழிலாளி கைது

திருப்பூரில் குடும்பத் தகராறில் மனைவி, மகனை அரிவாளால் வெட்டிய கட்டடத் தொழிலாளியைக் காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
கோப்புப்படம்
பகிர்:

திருப்பூரில் குடும்பத் தகராறில் மனைவி, மகனை அரிவாளால் வெட்டிய கட்டடத் தொழிலாளியைக் காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல் துறையினர் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜயராஜ் (67), இவரது மனைவி விஜயலட்சுமி, இந்தத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். விஜயராஜ் தனது பெயரில் இருந்த 150 சென்ட் நிலத்தை இரு மகன்களுக்கும் சரிசமமாகப்பிரித்துக் கொடுத்துள்ளார். இதன் பிறகு மனைவி, இளைய மகன்(விக்னேஷ்குமார் (25) ஆகியோருடன் சேர்ந்து திருப்பூர், கருவம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். 

மேலும், விஜயராஜ் கட்டடத் தொழிலாளியாகவும், மனைவி, மகன் பின்னலாடை நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில்,விஜயராஜூக்கும், அவரது மனைவி,மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. அப்போது இருவரும் சேர்ந்து அவரை வீட்டுக்கு வரக்கூடாது என்று எச்சரித்து வந்துள்ளனர். இதனால் இருவர் மீதும் அவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஜயலட்சுமி, விக்னேஷ்குமார் ஆகியோரை விஜயராஜ் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜயராஜை சனிக்கிழமை பிற்பகலில் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →