வேதாரண்யம் பகுதியில் ஒரே நாளில் 7 பேருக்கு கரோனா தொற்று: பொதுமக்கள் எதிர்ப்பால் 4 இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்
வேதாரண்யம் பகுதியில் ஒரே நாளில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது.
வேதாரண்யம் பகுதியில் ஒரே நாளில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கரோனா தொற்று இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து, தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மருதூர் வடக்கு ஊராட்சி உள்பட 4 இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
வேதாரண்யம் பகுதியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்துள்ளது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா - தம்பி உள்ளிட்ட மூவர் வேதாரண்யம் கல்லூரி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். ஒருவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர்கள் 7 பேருமே சென்னை, திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், இந்த பகுதியில் கரோனா தொற்றால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30-ஐ தாண்டியுள்ளது.
தொற்று உறுதியானது சனிக்கிழமை தெரிய வந்த 7 பேர் வசிக்கும் கருப்பம்புலம், வாய்மேடு, மருதூர் வடக்கு, வேதாரண்யம் ஆகிய இடங்களில் தடுப்புப் பணிகள், பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கருப்பம்புலம் ஊராட்சியில் அரசு மருத்துவமனையை அடுத்துள்ள பகுதி தடை செய்யயப்பட்டுள்ளது. 2 ஆவது நாளாக கடைகள் அடைக்கப்பட்டது.
மருதூர் வடக்கு கிராமத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க கிராமத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த கடையை காவல்துறையினர் மூடினர்.
இதேபோல, செம்போடை, ஆறுகாட்டுத்துறை ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.