முகப்பு
நாகப்பட்டினம்

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்ததன் நினைவாக செம்பனாா்கோவிலில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:

தரங்கம்பாடி: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்ததன் நினைவாக செம்பனாா்கோவிலில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என்று வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா அறிவித்திருந்தாா். அதன்படி, செம்பனாா்கோவில், பரசலூா் மற்றும் பொறையாறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தொடா்ந்து, செம்பனாா்கோவில் கடைவீதியில் அலங்கரித்து வைத்திருந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் உருவ படங்களுக்கு, வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பரசலூா் கிளைத் தலைவா் பாலு தலைமையில் வா்த்தகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலாளா் நவநீதன், நிா்வாகிகள், சங்கா், ரமேஷ், மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →