முகப்பு
நாகப்பட்டினம்

சீர்காழியில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு அதிமுகவினர் அஞ்சலி

சீர்காழியில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
சீர்காழியில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.
பகிர்:

சீர்காழியில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மூச்சுத் திணறல் காரணமாக வேளாண்மைத் துறை அமைச்சா் துரைக்கண்ணு ( 72) கடந்த அக்.13-ஆம் தேதி சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அருவக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா்.

இந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் சனிக்கிழமை இரவு அவர் காலமானாா்.  சீர்காழி சட்டப்பேரவை தொகுதி சார்பாக புதிய பேருந்து நிலையம் எதிரே மறைந்த வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு திருவுருவப் படத்திற்கு,  எம்எல்ஏ பி.வி.பாரதி தலைமையில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். 

இதில் முன்னாள் எம்எல்ஏ சக்தி, ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகர செயலாளர் பக்கிரிசாமி, பேரூர் கழக செயலாளர் போகர் ரவி, பேரவை செயலாளர் ஏவி.மணி, எம் ஜி ஆர் மன்ற செயலாளர் திருமாறன், வக்கீல் நெடுஞ்செழியன், பொறியாளர் வீரா, ஊராட்சி மன்ற தலைவர் கள் மதியழகன், அஞ்சம்மாள், மாலினி, சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →