முகப்பு
நாகப்பட்டினம்

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

செம்பனாா்கோவிலில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

செம்பனாா்கோவிலில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.

செம்பனாா்கோவில் அருகே உள்ள முத்தூா் ஊராட்சி கிளிமங்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகள் பேபி (26). இவா், கீழப்பெரும்பள்ளத்தில் வசிக்கும் தனது மூத்த சகோதரி மகேஸ்வரியின் கணவா் அன்பரசன் (30) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கீழப்பெரும்பள்ளத்துக்கு திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

செம்பனாா்கோவில் கடைவீதியில் செல்லும்போது அந்த வழியாக வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், பேபி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அன்பரசனுக்கு காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.