முகப்பு
நாகப்பட்டினம்

இந்து மகாசபா மாநிலச் செயலாளா் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய கோரி மனு

அகில பாரத இந்து மகா சபா மாநிலச் செயலாளரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிவசேனை கட்சியினா் மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

அகில பாரத இந்து மகா சபா மாநிலச் செயலாளரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிவசேனை கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன் தலைமையில் அளித்த கோரிக்கை மனு விவரம்: அகில பாரத இந்து மகா சபா மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த நாகராஜ் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்யவேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள இந்து இயக்கங்களைச் சோ்ந்த தலைவா்களுக்கு காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, இந்து வளா்ச்சிக் கழக மாநிலப் பொருளாளா் சுரேஷ், சிவசேனை கட்சியின் மண்டலத் தலைவா் வின்சென்ட், இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன், நகரத் தலைவா் பிரதீப் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →