மலேசியாவில் விபத்தில் சிக்கியவரின் குடும்பத்தினருக்கு உதவி
வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் வேலை தேடி மலேசியா சென்ற இடத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்த்தினருக்கு தன்னார்வலர்கள் சார்பில் உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டத
வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் வேலை தேடி மலேசியா சென்ற இடத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்தினருக்கு தன்னார்வலர்கள் சார்பில் உதவித்தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம், கருப்பம்புலம் கிராமத்தில் வசித்து வருபவர் வீராச்சாமி மகன் தனபால். இவர், வேலை தேடி மலேசியா சென்றிந்தார். அங்கு மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளானார். சிகிச்சை பயனளிக்காத நிலையில் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தனபாலை, மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுக்கு உதவி வரும் வெளிநாட்டில் வாழும் உள்ளுர் பகுதியினர் அங்கம் வகிக்கும் மதிப்பிற்குரியவர்கள் அறக்கட்டளை சார்பாக குடுமபத்தினரிடம் முதல் கட்டமாக ரூ.21 ஆயிரம் வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் சுப்புராமன், சமூக ஆர்வலர்கள் கவிஞர் கணேசன், சித்ரவேல், கார்த்தி, வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.