கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா தோணி
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா மரப்படகு (தோணி) ஒன்று கரை ஒதுங்கியிருப்பது செல்வாய்க்கிழமை தெரிய வந்தது
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா மரப்படகு (தோணி) ஒன்று கரை ஒதுங்கியிருப்பது செல்வாய்க்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
கோடியக்கரை கடற்கரையில் மரத்தால் செய்யப்பட்ட ஆளில்லா படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 20 அடி நீளத்தில் காணப்படும் இந்த படகு பழமையானதாகத் தெரிகிறது.
இதில், பழைய மீன்பிடி வலைகள் இருந்தன. இவை கரையோரத்தில் மீன்பிடிப்போர் பயன்படுத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது.
தகவல் அறிந்த கடலோரக் காவல் பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரணை மேற்கொண்டுள்னனர்.