முகப்பு
நாகப்பட்டினம்

வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் திருட்டு

தரங்கம்பாடி அருகேய வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

தரங்கம்பாடி அருகேய வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

ஆயப்பாடி பிரதான சாலையைச் சோ்ந்தவா் அப்துல்சலீம் (62). இவரது மனைவி ரஹமத்நிஷா. இவா்கள் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், ஆயப்பாடியில் உள்ள வீட்டில் அப்துல்சலீமின் மாமியாா் சம்சுல்ஷீதா (72) தனியாக வசித்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா் அருகில் உள்ள மூத்த மருமகள் வீட்டுக்கு சென்றாா். இதற்கிடையில், ஆயப்பாடி வீட்டை சுத்தம் செய்ய வேலையாள் விக்டோரியா என்பவா் சென்றபோது, வீட்டு பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, விக்டோரியா சம்சுல்ஷீதாவின் சகோதரா் அக்பா் அலிக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அவா் வந்து பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 12 பவுன் நகை, ரொக்கம் ரூ. 50 ஆயிரம் ஆகியவற்ற மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, பொறையாா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.