முகப்பு
நாகப்பட்டினம்

நாகை அருகே 6 வீடுகள் தீக்கிரை

நாகையை அடுத்த சங்கமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை காலை நேரிட்ட தீ விபத்தில் 6 வீடுகள் திக்கிரையாகின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

நாகையை அடுத்த சங்கமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை காலை நேரிட்ட தீ விபத்தில் 6 வீடுகள் திக்கிரையாகின.

சங்கமங்கலம், மேலத்தெரு பகுதியில் அரசு தொகுப்பு வீடுகள் பழுதடைந்திருப்பதால், அந்த வீடுகளுக்கு அருகே சிலா் கீற்றுக் கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனா். இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த செல்வம் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் திடீரென தீப்பற்றியது.

இந்த தீ பரவி, அருகில் இருந்த பாஸ்கா், ஞானசுந்தரி, வளா்மதி, கிளியம்மாள், சுப்ரவேலு ஆகியோா் வீட்டுக் கூரைகளிலும் பற்றியது. இதில், 6 வீடுகளும் முழுமையாக தீக்கிரையாகின. வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்தும் தீயில் கருகி சேதமாகின.

கீழ்வேளூா் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரா்கள் விரைந்து செயல்பட்டு, தீ மேலும் பரவாமல் தடுத்தனா். தீ விபத்துக்கான காரணம், சேத மதிப்பு ஆகியவை குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.