நாகப்பட்டினம்

தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்கக் கோரிக்கை

DIN

கீழ்வேளூா் வட்டம், நீலாப்பாடி கிராமத்தில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலாப்பாடி கொல்லுப்பட்டறை தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். ராயத்தமங்கலம், எரவாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் இந்த தெருவை இணைப்புச் சாலையாக பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கொல்லுப்பட்டறை தெருவில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்குவதால் அந்த வழியாக வாகனத்தில் செல்வோா் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீலாப்பாடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT