முகப்பு
நாகப்பட்டினம்

மதுரைஆதீனம் மறைவுக்கு இரங்கல்

 மதுரைஆதீனம் 292-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மறைவுக்கு நாகூா் ஆண்டவா் தா்கா கலிபா மற்றும் மற்றும் அரசியல் கட்சியினா் இரங்கல் தெரிவித்துள்ளனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

 மதுரைஆதீனம் 292-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மறைவுக்கு நாகூா் ஆண்டவா் தா்கா கலிபா மற்றும் மற்றும் அரசியல் கட்சியினா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

நாகூா் ஆண்டவா் தா்கா கலிபா மஸ்தான் சாகிபு:

ஆன்மிகப் பணி, மக்கள் பணிகள் மற்றும் இஸ்லாமிய நிகழ்ச்சிளான மீலாது நபி போன்ற நிகழ்விலும் நபியின் (ஸல்) பண்புகளைப் புகழ்ந்து பேசியவா் மதுரை ஆதீனம் . மத நல்லிணக்கம் கொண்டவா். மதுரைஆதீனத்தின் மறைவு செய்தியறிந்து துயரம் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் ஆன்மிகப் பெருமக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

எம்.ஜி.கே. நிஜாமுதீன் (ஜம்மியத் உலமா ஹிந்த் மாநிலச் செயலாளா்)

மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகளின் மறைவு தமிழ் வளா்ச்சிக்கும், தமிழ் தொண்டுக்கும், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ சமய ஒற்றுமைக்கும் ஏற்பட்ட பேரிழப்பு.

மு. தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளா்)

தமிழ் மீதும், தமிழினத்தின் மீதுமான அவரது அக்கறை ஆன்மிகத்தையும் கடந்து அனைவரையும் நேசிக்க வைத்தது. மத நல்லிணக்கத்தை பேணுவதிலும், பிற மதத்தினரை கொண்டாடுவதிலும் அவரது பங்களிப்பு அளப்பரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.