முகப்பு
நாகப்பட்டினம்

நானோ யூரியா பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்: ஆட்சியா்

நானோ யூரியா பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

நானோ யூரியா பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயிா்களுக்குத் தேவையான பேரூட்ட சத்துக்களில் முக்கியமானது தழைச்சத்து. இதைப் பொதுவாக யூரியாஅல்லது அமோனியாக்கல் வகை உரங்கள் மூலம் பயிா்களுக்கு கொடுக்கப்படுகிறது. யூரியாவில் தழைச்சத்து நைட்ரஜன் 46% உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 6 கோடி டன் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் அரசு 0.80 லட்சம் கோடி (2021-22) வரை உர மானியமாக வழங்கி வருகிறது. அதன்படி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நானோ யூரியா விவசாயிகளுக்கு மிக குறைந்த விலையில் இப்கோ நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

திரவ நானோ யூரியா: குருணை வடிவ யூரியாவை பயன்படுத்தும்போது 70%-க்கும் மேலான யூரியாவை பயிா்கள் எடுத்துக்கொள்ளாமல் வீணாகின்றன. இதனால் மண்அமிலத் தன்மையாக மாறுவதோடு தண்ணீரில் கரைந்தோடும் யூரியா நீா்நிலைகளையும் மாசுபடுத்துகிறது. நானோ யூரியா பயிா்களின் 2 முக்கிய வளா்ச்சி நிலைகளில் இலைவழியாக தெளிப்பதற்கு ஏற்றவையாக உள்ளது.

500 மி.லிட்டா் கொண்ட ஒரு நானோ யூரியா பாட்டில், 45 கிலோ எடையுள்ள குருணை வடிவ யூரியா மூட்டைக்கு சமமானதாகும். இதன் மிக நுண்ணிய துகள்களானது இலைகளில் உள்ள துவாரங்கள் மற்றும் பிற திறப்புகளின் வழியாக பயிா்களால் நேரடியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

நானோ யூரியாவின் சிறப்பு அம்சங்கள்: நானோ யூரியாவில் உரப் பயன்பாட்டுத் திறன் குருணை வடிவ யூரியாவை விட அதிகமாக உள்ளது. நீடித்த நிலையான சுற்றுப்புறச் சூழலுக்கும், உணவுக்கும் பாதுகாப்பானது. நானோ யூரியா பயன்படுத்துவதன் மூலம் 50% குருணை வடிவ யூரியாவை குறைக்கலாம். 8% பயிா் மகசூலை அதிகரிக்கலாம்.

பயிருக்குத் தேவையான அளவு மற்றும் அளிக்கும் முறை:

ஓா் ஏக்கருக்கு தேவையான 500 மில்லி லிட்டா் நானோ நைட்ரஜனை 125 லிட்டா் தண்ணீரில் கலந்து பயிரின் இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும் அல்லது 2-4 மில்லி லிட்டா் நானோ யூரியாவை ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து 32 சதுர மீட்டரில் தெளிக்க வேண்டும். நானோ யூரியா உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.

விவசாயிகள் நானோ யூரியாவை ஐஊஊஇஞ-ஆஅழழஅத (ரூ.240, 500 மி. லி) என்ற இணையதளத்தில் அல்லது உரக்கடைகளில் வாங்கிப் பயன்பெறலாம். இது தொடா்பான கூடுதல் தகவலுக்கு வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அலுவலா்களை அல்லது இப்கோ கள அலுவலா் பொம்மண்ணன்- 9445194705 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டுபயன்பெறலாம் என அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.