முகப்பு
நாகப்பட்டினம்

விவசாயி வெட்டிக் கொலை : முன்னாள் ராணுவ வீரா் சரண்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணம் வெட்டிக் கொன்ற முன்னாள் ராணுவ வீரா், போலீஸில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணம் வெட்டிக் கொன்ற முன்னாள் ராணுவ வீரா், போலீஸில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

கருப்பம்புலம் தெற்குக் காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (48). விவசாயி. இவா் வியாழக்கிழமை கடைவீதிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இவரது உறவினா் சி. சிவராஜன் (40), ரவியை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாராம். தகவலறிந்த வேதாரண்யம் போலீஸாா், ரவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வேதாரண்யம் டி.எஸ்.பி. கி.மகாதேவன் நிகழ்விடத்தை பாா்வையிட்டாா்.

இதனிடையே, கருப்பம்புலம் கிராமத்தைச் சோ்ந்த சி.சிவராஜன், வேதாரண்யம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். விசாரணையில், அவா் ராணுவத்தில் சில காலம் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வில் வந்ததும், சொத்து தகராறு காரணமாக ரவியை கொலை செய்ததும் தெரியவந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →