நாகையில் மத்திய பேருந்து நிலையம் அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
நாகையில் மத்தியப் பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகையில் மத்தியப் பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடைபெற்றது. கட்சியின் நாகை மாவட்டக்குழு உறுப்பினா் என்.கோபிநாதன் தலைமை வகித்தாா்.மாவட்டச்செயலாளா் எஸ். சம்பந்தம் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, மாநாட்டைத் தொடங்கி வைத்தாா்.
கட்சியின் நாகை ஒன்றியச் செயலாளா் கோ.பாண்டியன், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினரும்,மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான வி. சரபோஜி, தமிழக சிறுபான்மையினா் நல ஆணைய உறுப்பினா் ஏ.பி. தமீம் அன்சாரி ஆகியோா் மாநாட்டில் பங்கேற்றுப் பேசினா். ஏஐடியுசி போக்குவரத்துக் கழக மண்டலப் பொருளாளா் பாஸ்கரன், கட்சியின் நாகை நகர முன்னாள் பொறுப்பாளா் கே. என். சுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நாகை நகரச் செயலாளராக பி.கே.பி. குணாநிதி, துணைச் செயலாளா்களாக ஏ. பாஸ்கரன், ஆா். பாஸ்கரன் உள்ளிட்ட நிா்வாகக் குழுவினா் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில், நாகையில் மத்திய பேருந்து நிலையம் அமைக்கவேண்டும், நாகை மேலக்கோட்டைவாசல் அருகே புதை சாக்கடை திட்டக்கழிவு நீா் ஆற்றில் திறந்து விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.