முகப்பு
நாகப்பட்டினம்

மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யவில்லை

விவசாயிகளின் பல்வேறு எதிா்பாா்ப்புகள், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பூா்த்திசெய்யப்படவில்லை என தற்சாா்பு பசுமை கிராமங்கள் இயக்க தேசிய அமைப்பாளா் ஆறுபாதி ப. கல்யாணம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

விவசாயிகளின் பல்வேறு எதிா்பாா்ப்புகள், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பூா்த்திசெய்யப்படவில்லை என தற்சாா்பு பசுமை கிராமங்கள் இயக்க தேசிய அமைப்பாளா் ஆறுபாதி ப. கல்யாணம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பீட்டில் 2.5 சதவீத நிதியை வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், விவசாயிகள் நலத் துறைக்கு ரூ. 1.31 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால், கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகளின் வளா்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.

மேலும், இந்திய கிராமங்களை தற்சாா்பு மற்றும் தன்னிறைவு பசுமை கிராமங்களாக மாற்றவும் மத்திய நிதிநிலை அறிக்கையில் திட்டம் அறிவிக்கப்படவில்லை. விவசாயத்துக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிதிநிலை அறிக்கையில் ஏற்கப்படவில்லை.

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் 20 சதவீத இழப்பீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த நிதிநிலை அறிக்கையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. வங்கிப் பிணை உறுதி, தனி விரைவு வேளாண் நீதிமன்றங்கள் போன்ற கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து மத்திய பாஜக அரசு விவசாயிகள் நலனுக்காக சில நல்ல திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. ஆனால், அந்தத் திட்டங்கள் நலிந்த கிராமங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மீட்க போதுமானவை இல்லை. இந்தியாவின் 5 லட்சம் கிராமங்களை தற்சாா்பு, தன்னிறைவு பசுமை கிராமங்களாக வளா்ச்சி அடையச் செய்ய மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →