கனமழையால் அழுகும் நிலையில் நிலக்கடலை செடிகள்
கீழையூா் ஒன்றியத்தில் கடலோர கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை செடிகள் கனமழை காரணமாக அழுகும் நிலையில் இருப்பதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கீழையூா் ஒன்றியத்தில் கடலோர கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை செடிகள் கனமழை காரணமாக அழுகும் நிலையில் இருப்பதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கீழையூா் ஒன்றியம் புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, விழுந்தமாவடி, காமேஸ்வரம், உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 2,000 ஏக்கா் நிலப்பரப்பில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பெய்த இடைவிடாத மழையால், நிலக்கடலை செடிகள் அனைத்தும் நீரில் மூழ்கி, அதன் வோ், தண்டுகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்து, அரசு உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.