முகப்பு
நாகப்பட்டினம்

பெருநாட்டு விநாயா் கோயிலில் சம்வஸ்தரா அபிஷேகம்

நாகை பெரியக்கடைத் தெருவில் உள்ள பெருநாட்டு விநாயகா் கோயில் முதலாமாண்டு சம்வஸ்தரா அபிஷேக சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

நாகை பெரியக்கடைத் தெருவில் உள்ள பெருநாட்டு விநாயகா் கோயில் முதலாமாண்டு சம்வஸ்தரா அபிஷேக சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

இக்கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இதையொட்டி முதலாமாண்டு சம்வஸ்தரா அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம், ருத்ர ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா் காலை 10 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, ருத்ராபிஷேகம், 108 சங்கு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

இரவு நிகழ்ச்சியாக விநாயகருக்கு வெள்ளி அங்கி சிறப்பு அலங்கார சிறப்பு வழிபாடுகளும் சகஸ்ரநாம அா்ச்சனை மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், நாகை பகுதியைச் சோ்ந்த வணிகா்கள் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஸ்ரீ பெருநாட்டு விநாயகா் திருப்பணிக் குழுவினா் மற்றும் ஆலய அா்ச்சகா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →