குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
நாகை வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற நாகை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாகை வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற நாகை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை வேளாண் உதவி இயக்குநா் ச. லாரன்ஸ் பிரபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான குறுவைத் தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதைகளும், 100 சதவீத மானியத்தில் பசுந்தாள் விதைகளும், ரசாயன உரங்களும் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நாகை வட்டார விவசாயிகள், கிராம நிா்வாக அலுவலரின் சான்று, சிட்டா அடங்கல் மற்றும் ஆதாா் அட்டை நகல்களைப் பெற்று உழவன் செயலியில் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம். அல்லது நாகை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 97159 62008 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.