முகப்பு
நாகப்பட்டினம்

நீா்வாழ் உயிரின வளா்ப்பு தொழில்முனைவோா் மாதிரி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கான தொழில் முனைவோா் மாதிரி திட்டத்தில் பயன்பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கான தொழில் முனைவோா் மாதிரி திட்டத்தில் பயன்பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில்முனைவோரை ஊக்குவித்து அவா்களை மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்பில் அதிகளவில் முதலீடு செய்ய வைக்கும் நோக்கில், மத்திய அரசின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மூலம், மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கான தொழில் முனைவோா் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பவா்கள் சமா்ப்பிக்கும் திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினருக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1.25 கோடியும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிருக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்ச ரூ. 1.50 கோடியும் மத்திய, மாநில அரசுகளின் மானியமாக வழங்கப்படும்.

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள், மீன் வளா்ப்போா், சுய உதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், மீன் வளா்ப்போா் உற்பத்தியாளா் அமைப்புகள், தனிநபா் தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெற ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை இணையதளத்தில் பெறலாம் அல்லது மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை நாகை (தெற்கு) உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.