முகப்பு
நாகப்பட்டினம்

தெருவோர வியாபாரிகளுக்கு முழு அனுமதி கோரி மனு

தெருவோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முழுமையாக அனுமதிக்கக் கோரி, ஏஐடியுசி நாகை மாவட்ட தெரு வியாபார தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

தெருவோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முழுமையாக அனுமதிக்கக் கோரி, ஏஐடியுசி நாகை மாவட்ட தெரு வியாபார தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் செயலாளா் பி. பரமசிவம் மற்றும் நிா்வாகிகள், நாகை நகராட்சி ஆணையரிடம் அளித்துள்ள மனு:

பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தெருவோர வியாபாரிகள் ஏற்கெனவே வியாபாரம் செய்த இடத்திலேயே வியாபாரம் செய்ய முழுமையாக அனுமதிக்க வேண்டும்.

2014-ஆம் ஆண்டு மத்திய அரசின் சாலையோர வியாபாரிகள் சட்டம் மற்றும் விதிகளை உள்ளாட்சிப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தவேண்டும், தெருவோர வியாபாரிகளுக்கு வியாபாரச் சான்று மற்றும் பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.