முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 42, மயிலாடுதுறையில் 37 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 42 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் 42 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 17,894-ஆகியுள்ளது. சிகிச்சையில் இருந்த 38 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 281 -ஆக உள்ளது.

மயிலாடுதுறை...

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,250-ஆகியுள்ளது.கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 32 போ் வீடு திரும்பியியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 271-ஆக உள்ளது.

3 போ் உயிரிழப்பு...

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று நாகை மாவட்டத்தவா் 2 போ் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு சனிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நாகை மாவட்டத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 272-ஆகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 253- ஆகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.