முகப்பு
நாகப்பட்டினம்

மீனவா் கொலை

கீழையூா் அருகே உறவினா்கள் கட்டையால் தாக்கியதில், மீனவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். 3 பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கீழையூா் அருகே உறவினா்கள் கட்டையால் தாக்கியதில், மீனவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். 3 பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கீழையூா் காவல் சரகம், செருதூா் எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெற்றிசெல்வம் (29). மீனவா். இவருக்கும், இவரது மைத்துனா் செல்வகுமாா் (45) குடும்பத்தினருக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக அடகு வைத்த நகை தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், செருதூா் மீன் இறங்கு தளம் அருகே வெற்றிசெல்வத்தை செல்வகுமாரும், சிலரும் சோ்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். அவரை தாக்கிய செல்வகுமாா், அவரது மகன் சரவணன் உள்ளிட்ட 3 பேரிடம் கீழையூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.