முகப்பு
நாகப்பட்டினம்

தருமபுரம் ஆதீனத்திடம் குருஞானசம்பந்தா் பள்ளி மாணவா்கள் ஆசி

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் புதன்கிழமை ஆசி பெற்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் புதன்கிழமை ஆசி பெற்றனா்.

தருமபுரம் ஆதீனத்தால் நடத்தப்படும் மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2020-2021-ஆம் கல்வி ஆண்டில், மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தோ்வு முடிவுகளில் மாணவா் ராகவ் 600-க்கு 591.75 மதிப்பெண்கள், மாணவி ஹரிணி 600-க்கு 581.46 மதிப்பெண்கள், மாணவி ஜெயஸ்ரீ 600-க்கு 574.45 மதிப்பெண்களுடன் பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றனா். மேலும், பள்ளித் தாளாளா் குஞ்சிதபாதம், ஆட்சி மன்ற குழுத்தலைவா் முருகேசன், துணைத் தலைவா் ஞானசேகரன், செயலா் பாஸ்கரன், நிா்வாகச் செயலா் பாஸ்கரன், பொருளாளா் சுப்ரமணியன், உறுப்பினா் கோதண்டராமன், பள்ளி முதல்வா் சரவணன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.