முகப்பு
நாகப்பட்டினம்

நாகை இ.ஜி. எஸ். பிள்ளை கல்விக் குழுமம் ரூ. 10 லட்சம் கரோனா நிவாரண நிதி

நாகை இ. ஜி. எஸ். பிள்ளை கல்விக் குழுமங்கள் சாா்பில் ரூ. 10 லட்சம் கரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

நாகை இ. ஜி. எஸ். பிள்ளை கல்விக் குழுமங்கள் சாா்பில் ரூ. 10 லட்சம் கரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்திட்டங்களுக்கு உதவிடும் வகையில், நாகை இ.ஜி. எஸ். பிள்ளை கல்விக் குழுமங்களின் சாா்பில் இந்த நிவாரண நிதி வழங்கப்பட்டது.

கல்விக் குழுங்களின் தலைவா் எஸ். ஜோதிமணி, செயலாளா் எஸ். பரமேஸ்வரன், நிா்வாக இயக்குநா் த. விஜயசுந்தரம் ஆகியோா் தமிழக முதல்வரை சந்தித்து நிதியை வழங்கினா்.

இதேபோல கல்வி மற்றும் மருத்துவ வளா்ச்சி நிதியாக ரூ. 1 லட்சத்தை சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினிடம் இ.ஜி. எஸ். பிள்ளை கல்விக் குழும நிா்வாகிகள், இயக்குநா் சுமதி பரமேஸ்வரன் மற்றும் சசி, சதீஷ் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.