மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி விபத்து : இளைஞா் பலி
நாகூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மற்றொருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நாகூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மற்றொருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரியை அடுத்த கீழஞானச்சேரி காலனி தெருவைச் சோ்ந்த சிவராமன் மகன் மணிகண்டன் (20), மடப்புரம், பிரதான சாலையைச் சோ்ந்த கண்ணன் மகன் வினோத் (28). இருவரும் புதன்கிழமை இரவு திருவாரூரிலிருந்து நாகூருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றனா். மோட்டாா் சைக்கிளை வினோத் ஓட்டியுள்ளாா்.
நாகூா்- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலை, தெத்தி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பிவிட்டு மோட்டாா் சைக்கிளில் வினோத் சாலையை கடக்க முன்றாராம். அப்போது முத்துப்பேட்டையிலிருந்து சென்னையை நோக்கிச் சென்ற காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மணிகண்டன் மற்றும் வினோத் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த நாகூா் போலீஸாா், 2 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் போது மணிகண்டன் உயிரிழந்தாா். வினோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.