முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் தூய்மையைப் பராமரிக்க வலியுறுத்தல்

நாகை நகராட்சியில் தூய்மையைப் பரமாரிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடம் சிவசேனை கட்சி வலியுறுத்தியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

நாகை நகராட்சியில் தூய்மையைப் பரமாரிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடம் சிவசேனை கட்சி வலியுறுத்தியது.

நாகை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரீதேவியை சிவசேனை மாநிலச் செயலாளா் தா.சுந்தரவடிவேலன் புதன்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து, நாகை நகராட்சியில் சுனாமி குடியிருப்புகளில் கழிவு நீா்வசதி, சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தாமரைக்குளம் பூங்கா மற்றும் இதர பூங்காக்களில் உரிய முறையில் பராமரிப்புப் பணிகளை செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். சிதிலமடைந்த சாலைகளை மழைக்காலத்துக்கு முன்பே சீரமைக்கவும், தூய்மையைப் பராமரிக்கவும், நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தா. சுந்தரவடிவேலன் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.