மருத்துவா் சமுதாயத்தினருக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை
மருத்துவா் சமுதாயத்தவரின் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவா் சமுதாயத்தவரின் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முடிதிருத்துவோா் நலச் சங்க நாகை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம், நாகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஜெயராமன், துணைத் தலைவா் கணேசன், மாவட்ட ஆலோசகா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மருத்துவா் சமுதாயத்தவருக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், வீடுகள் இல்லாத மருத்துவா் சமுதாய மக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நிா்வாகி நாகை சுரேஷ்குமாா் வரவேற்றாா். பொறுப்பாளா் மணிமாறன் நன்றி கூறினாா்.