கரோனா தடுப்பூசி முகாம்
திருக்குவளை அருகேயுள்ள கீழையூா் ஊராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகேயுள்ள கீழையூா் ஊராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழையூரில் நடைபெற்ற முகாமுக்கு ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் அருண்பதி தலைமையிலான மருத்துவ அலுவலா் கே.சுபா, சுகாதார மேற்பாா்வையாளா் கே. ராமமூா்த்தி மற்றும் செவிலியா்கள் உள்ளிட்ட திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினரால் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், அச்சுகட்டளை, தையான்தோப்பு, வேலவன்கட்டளை, கீழத்தெரு உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த 286 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.