சீர்காழி அருகே கூப்பிடுவான் உப்பனாற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சீர்காழி அருகே தென்னலக்குடி கூப்பிடுவான் உப்பனாற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்சீர்காழி அருகே கூப்பிடுவான் உப்பனாற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சீர்காழி அருகே தென்னலக்குடி கூப்பிடுவான் உப்பனாற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சீர்காழி அருகே தென்னலக்குடி கூப்பிடுவான் உப்பனாற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் வருகின்ற 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ளது. அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல தமிழக அரசு சிறப்பு தூர்வாரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி 8 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் ரூ.65 கோடி செலவில் பாசன மற்றும் வடிகாலை தூர்வாரி வருகின்றன.
இந்நிலையில் சீர்காழி அருகே தென்னலகுடி கூப்பிடுவான் உப்பனாற்றை சரிவர தூர்வார வில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கூப்பிடுவான் உப்பனாற்றை தூர்வார கடந்த 10 நாட்களுக்கு முன் அரசு உத்திரவிட்டிருந்தது எனவும், தற்பொழுது ஆற்றை சரிவர தூர்வாராமல் பணி முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிப்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் ஆற்றில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழை வெள்ள காலங்களில் செம்பதனிருப்பு, காத்திருப்பு, தென்னலக்குடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் வடிகாலாக இந்த கூப்பிடுவான் உப்பனாறு திகழ்வதாகவும், இந்த உப்பனாற்றை சரிவர தூர்வாராதால் மேற்கண்ட கிராமங்கள் மழை வெள்ள காலங்களில் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் உடனடியாக உப்பனாற்றை சரிவர தூர்வார கோரிக்கை விடுத்துள்ளனர்.