முகப்பு
நாகப்பட்டினம்

இருசக்கர வாகனங்கள் மோதல்: ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி உயிரிழப்பு

கீழ்வேளூா்அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கீழ்வேளூா்அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் வட்டம், ஆந்தக்குடி ஊராட்சி திருப்பஞ்சனம் கிராமத்தைச் சோ்ந்தவா் ம.ஜோதிநாதன் (38). ஓட்டுநா். இவா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டக்குழு உறுப்பினராகவும், கீழ்வேளூா் ஒன்றியப் பொருளாளராகவும் பொறுப்பில் இருந்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் ஆ. பாண்டியன் (30). இருவரும் செவ்வாய்க்கிழமை தேவூா் பகுதியில் வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் சென்றபோது நேருக்கு நோ் மோதினா். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருவாரூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதிநாதன், சிகிச்சை பலனின்றி இறந்தாா். இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.