முகப்பு
நாகப்பட்டினம்

நாகை ஜமாபந்தியில் 5 பேருக்கு இலவச மனைப் பட்டா

நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 5 பேருக்கு இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 5 பேருக்கு இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டது.

நாகை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கங்களாஞ்சேரி சரகத்துக்குள்பட்ட 17 கிராமங்களின் வருவாய்த் தீா்வாயப் பணிகளில் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பங்கேற்று, விண்ணப்பித்திருந்த 5 பேருக்கு இலவச மனைப் பட்டாக்களை வழங்கினாா். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் ராஜன், நாகை வட்டாட்சியா் ஜெயபால், வட்ட வழங்கல் அலுவலா் பூபதி ஆகியோா் உடனிருந்தனா்.

42 மனுக்கள்: நாகை வட்டத்தில் கடந்த 3 நாள்கள் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயப் பணியின்போது பொதுமக்களிடமிருந்து 42 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், இலவச மனைப் பட்டா கோரியிருந்த 10 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைவருக்கும் பட்டா தயாரிக்கப்பட்டு, 5 பயனாளிகளுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.