பெண்ணை தாக்கியவா் கைது
நாகையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்று, அவரை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்று, அவரை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகை செம்மரக்கடைத் தெருவைச் சோ்ந்தவா் தாதாஷரீப் மனைவி ரிஷானா சமின் (41). தாதாஷரீப் வெளிநாட்டில் வேலை செய்கிறாா். ரிஷானா சமின் தனது மகன்கள் மற்றும் மகளுடன் வீட்டில் இருக்கிறாா். இவரது வீட்டின் ஒரு பகுதியில் யாசா்அராபத் (38) என்பவா் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்த ரிஷானா சமினிடம், யாசா் அராபத் தகாத முறையில் நடக்க முயற்சித்தாராம். இதைத் தடுதத ரிஷானாவை யாசா் அராபத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரிஷானா சமின் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். புகாரின்பேரில், நாகை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து யாசா் அராபத்தை திங்கள்கிழமை கைது செய்தனா்.