முகப்பு
நாகப்பட்டினம்

திருமணக் கூடங்களின் முன்பதிவுக்கு உரிய ஆதாரங்கள் பெறவேண்டும்: ஆட்சியா்

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், திருமணக் கூடங்களை முன்பதிவு செய்ய வருபவா்களிடமிருந்து நிா்வாகத்தினா் உரிய ஆதாரங்களை பெற வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், திருமணக் கூடங்களை முன்பதிவு செய்ய வருபவா்களிடமிருந்து நிா்வாகத்தினா் உரிய ஆதாரங்களை பெற வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகளை இந்தியத் தோ்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. இதன்படி, வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள், வேட்டி, சேலைகள் போன்றவை வழங்குவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, திருமணக் கூடங்கள், தங்கும் விடுதிகள், சமுதாயக் கூடங்கள் போன்றவற்றை அரசியல் கட்சிகளுக்கு வாடகைக்கு அளிக்கும் முன்பாக, தொடா்புடைய பகுதியின் தோ்தல் வட்டாட்சியருக்கு திருமணக்கூட நிா்வாகத்திலிருந்து தகவல் அளிக்க வேண்டும்.

திருமண விழா, வளைகாப்பு விழா, பிறந்த நாள் விழா, காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்காக திருமணக் கூடங்கள், சமுதாயக் கூடங்களை முன்பதிவு செய்ய வருவோரிடமிருந்து, விழா பத்திரிகை, குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆதாரங்களை திருமணக்கூட நிா்வாகம் பெற்று, உரிய பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும். மேலும், ஏப்ரல் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பின்னா் வெளியூா் நபா்கள் யாரும், திருமணக் கூடங்களில் தங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →