முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மண்டலத்தில் 117 பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதி

தமிழக அரசு அறிவிப்புப்படி, அரசுப் போக்குவரத்துக் கழக நாகை மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில், 117 பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

தமிழக அரசு அறிவிப்புப்படி, அரசுப் போக்குவரத்துக் கழக நாகை மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில், 117 பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில் மகளிா் கட்டணமின்றி பயணிப்பதற்கான அரசாணையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதையடுத்து, மகளிருக்குக் கட்டணமில்லா பயணத்தை அனுமதிக்கும் பேருந்துகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள், அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, நாகை மண்டலத்துக்கு உள்பட்ட நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்கால், சீா்காழி, வேதாரண்யம் உள்பட 11 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில், மகளிருக்கான இலவச பயணம் அனுமதிக்கப்படும் பேருந்துகளின் முகப்பில் மகளிா் பயணம் செய்ய கட்டணமில்லை என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பட்டைகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நாகை மண்டலத்துக்குள்பட்ட 11 பணிமனைகளில் இருந்து இயங்கும் பேருந்துகளில், 117 பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லா சேவை அனுமதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

சனிக்கிழமை காலை கட்டணமில்லா பேருந்து சேவையில் பயன் பெற்ற பெண்கள், பேருந்து பயணத்துக்கான பணத் தேவைக்கு சிரமப்படாமல் பயணிக்க வழிவகை செய்துள்ள இந்தக் கட்டணமில்லா சேவை தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தச் சேவையைத் தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.