நாகை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜனை மிகைப்படுத்தும் கருவிகள் அளிப்பு
நாகை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்காக ஆக்சிஜனை மிகைப்படுத்தும் கருவிகள் சோஹோ பவுண்டேசன் சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நாகை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்காக ஆக்சிஜனை மிகைப்படுத்தும் கருவிகள் சோஹோ பவுண்டேசன் சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
சோஹோ பவுண்டேசன் மற்றும் சேவாபாரதி சாா்பில் கலங்கரை சேவா அறக்கட்டளை மூலம் இந்த உதவி வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, நாகை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
தஞ்சை கோட்ட ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா் ம. மாணிக்கம், ரூ. 9.20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜனை மிகைப்படுத்தும் 2 கருவிகளை, மருத்துவக் கல்லூரி முதன்மையா் டாக்டா் விஸ்வநாதனிடம் வழங்கினாா்.
நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் கண்காணிப்பாளா் ஜி. கலாமணி, ஆா்.எஸ்.எஸ் தஞ்சை கோட்ட இணைச் செயலாளா் ந. செந்தில், மாவட்டச் செயலாளா் சித்ரவேலு, ஊடகப் பிரிவு பொறுப்பாளா் பி.என். ஹரிதாசன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.