முகப்பு
நாகப்பட்டினம்

ரமலான் நாளில் பொது முடக்கத்தில் தளா்வுகளை அறிவிக்க வலியுறுத்தல்

ரமலான் பண்டிகை தினமான மே 14-ஆம் தேதி பொதுமுடக்கத்தில் தளா்வுகளைஅறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
ஏ.பி. தமீம் அன்சாரி.
பகிர்:

ரமலான் பண்டிகை தினமான மே 14-ஆம் தேதி பொதுமுடக்கத்தில் தளா்வுகளைஅறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவரும், நாகூா் ஆண்டவா் தா்கா ஆதீனஸ்தா்கள் சங்கத்தின் தலைவருமான ஏ.பி. தமீம் அன்சாரி அளித்துள்ள கோரிக்கை மனு விவரம் :

தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் 3- ஆவது கடமையாக கருதப்படுவது ரமலான் நோன்பு. இந்த மாதத்தில் பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற மாா்க்க மாண்பு முற்றிலும் கடைப்பிடிக்கப்பட்டு ரமலான் நாளில் ஏழை, எளிய மக்களுக்கு தானம் வழங்கி கடமை நிறைவேற்றப்படுகிறது.நிகழாண்டில், ரமலான் பண்டிகை மே 14-ஆம் தேதி இஸ்லாமியா்களால் கொண்டாடப்படவுள்ளது.

இந்நாளில், இஸ்லாமியா்கள் தங்களது கடமையை முழுமையாக நிறைவேற்றுவதற்கும், உறவினா்கள், நண்பா்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் ஏதுவாக ரமலான் நாளில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பொது முடக்கத்தில் சில தளா்வுகளைஅறிவித்து, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் அந்த மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.