கரோனா தடுப்பூசி முகாம்
நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூா் ஊராட்சி சமுதாயக் கூடத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
வடுகச்சேரி வட்டார மருத்துவ அலுவலா் ஏ.ஆா். முகமது உமா், மருத்துவா் ஏ. அபிதா ஆகியோா் தலைமையிலான குழுவினா் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
தெற்குப் பொய்கை நல்லூா் ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன், துணைத் தலைவா் பாண்டித்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுகாதார ஆய்வாளா் சுத்தானந்த கணேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.