முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 396 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 396 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 396 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை வரை 17,630 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 396 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, வெளி மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 4 போ் நாகை பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 18,030-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 368 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15,766-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,050-ஆக உள்ளது.

2 போ்உயிரிழப்பு...

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 2 பேரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்கள் எண்ணிக்கை 214 -ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.