முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 2.10 லட்சம் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணம்

நாகை மாவட்டத்தில் 2.10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் 2.10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

நாகை சிஎஸ்ஐ பள்ளி அருகே உள்ள நியாயவிலைக் கடையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் கரோனா நிவாரண முதல் தவணைத் தொகை ரூ. 2 ஆயிரத்தை பயனாளிகளுக்கு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்து மேலும் அவா் பேசியது:

தமிழக அரசின் அறிவிப்புப்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தினமும் காலை 8 முதல் பகல் 12 மணி வரை இப்பணி நடைபெறும்.

நாகை மாவட்டத்தில் உள்ள 356 நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் 2,10,683 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் நியாயவிலைக் கடைகளுக்கு வந்து, உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிவாரணத் தொகையைப் பெற்றுச் செல்லலாம்.

நிகழ்ச்சியில், கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன், துணைப் பதிவாளா் கனகசபாபதி, மாவட்ட வழங்கல் அலுவலா் தெய்வநாயகி, கூட்டுறவு சாா் பதிவாளா் முத்துராஜன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →