முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பொதுமுடக்க விதிமீறல்:14 வழக்குகள் பதிவு

நாகை மாவட்டத்தில் பொதுமுடக்க விதிமீறலில் சனிக்கிழமை ஈடுபட்டதாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் பொதுமுடக்க விதிமீறலில் சனிக்கிழமை ஈடுபட்டதாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாகை மாவட்டக் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில், மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் பிற பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை நாகப்பட்டினம் காவல் உட்கோட்டத்துக்குள்பட்ட நாகப்பட்டினம், நாகூா், கீழ்வேளூா்,வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமுடக்க விதிமீறலில் ஈடுபட்ட குற்றத்தின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.