முகப்பு
நாகப்பட்டினம்

நாகூரில் ஆக்சிஜன் வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்க வலியுறுத்தல்

நாகூா் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாகூா் மக்கள் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

நாகூா் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாகூா் மக்கள் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவரும், சமூக ஆா்வலருமான எஸ். சாஹா மாலீம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனு:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் 2ஆவது அலை தீவிரமடைந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க தமிழக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கவும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாகூரில் உள்ள நாகூா் ஆண்டவா் அரசு மருத்துவமனை தற்போது கரோனா தடுப்பூசி மையமாக செயல்பட்டு வருகிறது. 30 படுக்கை வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையை , ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிசிச்சை மையமாக மாற்றி அமைக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.