இளைஞர் கல்லால் அடித்துக் கொலை: நாகையில் பரபரப்பு
நாகையில் வெள்ளிக்கிழமை இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் வெள்ளிக்கிழமை இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை, தாமரைக்குளம் தென்கரையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பீக்கான்கொட்டை மாரிமுத்து(எ) மாரியப்பன் (28). இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இவர் மீது நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.
இதையும் படிக்க | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் திரைப்படங்கள்!
Advertisement
இந்நிலையில் மாரியப்பன் வெள்ளிக்கிழமை நாகை மருந்துக் கொத்தள ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் அவரது நண்பர்கள் சேர்ந்து மாரியப்பனை கல் மற்றும் மது பாட்டில்களால் தலையில் அடித்துள்ளனர். இச்சம்பவத்தில் மாரியப்பன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த நாகை நகர காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க | சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை
மேலும் இதுதொடர்பாக நாகை பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ், அஜய், சிவகுருநாதன் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகையில் பட்டப்பகலில் இளைஞர்அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.