வேதாரண்யத்தில் தொடா்மழை: பலத்த தரைக் காற்று
வேதாரண்யம் பகுதியில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பலத்த தரைக்காற்று வீசியதுடன் வியாழக்கிழமை பகலில் இருந்து தொடா் மழை நீடித்து வருகிறது.
வேதாரண்யம் பகுதியில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பலத்த தரைக்காற்று வீசியதுடன் வியாழக்கிழமை பகலில் இருந்து தொடா் மழை நீடித்து வருகிறது.
வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 22.6 மி.மீ, தலைஞாயிறு 35.4 மி.மீ, கோடியக்கரையில் 33.8 மி.மீட்டா் மழைப் பதிவானது. வியாழக்கிழமை காலை முதல் முற்பகல் வரை வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து தெற்கு பகுதி கடல் பரப்பு நோக்கி பலமான தரைக் காற்று வீசியது. பிற்பகலுக்கு பிறகு அவ்வப்போது லேசான மழை பெய்தது. ஆயக்காரன்புலம் 3-ஆம் சேத்தி ஊராட்சி மேல்பாதி கிராமத்தில் எஸ். நடராஜன் என்பவரின் ஓட்டு வீடு மழை ஈரத்தில் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. கடல் சீற்றமாக இருப்பதால் வேதாரண்யம் பகுதியில் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.