முகப்பு
நாகப்பட்டினம்

தீபாவளி போனஸ் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி நாகையில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

தீபாவளி போனஸ் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி நாகையில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன், அமைப்பின் நாகை திட்டத் தலைவா் எஸ். சிவராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவளி போனஸ் தொகையை உயா்த்தி வழங்கவேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு கருணைத் தொகை வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், திட்டப் பொருளாளா் செந்தில்குமாா், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பின எஸ். மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.