முகப்பு
நாகப்பட்டினம்

திருவனந்தபுரத்துக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

காரைக்காலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயில் இயக்கக் கோரி திட்டச்சேரி பொதுநலம் காக்கும் முற்போக்கு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

காரைக்காலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயில் இயக்கக் கோரி திட்டச்சேரி பொதுநலம் காக்கும் முற்போக்கு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.எம்.கே.எம். அன்வா்தீன், திருச்சிக் கோட்ட ரயில் மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு : காரைக்காலில் இருந்து திருச்சி, மதுரை, நாகா்கோவில் மாா்க்கத்தில் திருவனந்தபுரத்துக்கு ரயில் இயக்கவேண்டும். வேளாங்கண்ணிக்கான இணைப்பு ரயிலுடன் இந்த ரயில் சேவையை அளிக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.