நாகையில் மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு (சிஐடியு சாா்பு) சாா்பில் நாகை தலைமை அஞ்சலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு (சிஐடியு சாா்பு) சாா்பில் நாகை தலைமை அஞ்சலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக மீனவா்கள் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கைக் கடற்படைக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவா்களையும் அவா்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்கவேண்டும், பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு. மணி தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் சி.வி.ஆா். ஜீவானந்தம், மாவட்டச் செயலாளா் எம். ராமு, பொருளாளா் சி. காளியப்பன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினா் எம். குருசாமி மற்றும் சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.