முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகேலாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 இளைஞா்கள் பலி

வேதாரண்யம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

வேதாரண்யம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு, கீழ்க்காடு பகுதியை சோ்ந்த அன்புமுருகன் மகன் ஆனந்தன் (27). தேகத்தாக்குடி, வைத்தியா்காடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் சூா்யா (25). நண்பா்களான இருவரும் வெள்ளிக்கிழமை மாலை நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனா்.

செம்போடை வடக்கு கடைத் தெருவில் சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தன், சூா்யா இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த டிஎஸ்பி முருகவேல் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சடலங்களை உடற்கூறாய்வுக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →