தொழிற்பயிற்சி பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.
தொழிற்பயிற்சி பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக (கும்பகோணம்) ஒத்துழைப்புடன் தொழில் பழகுநா் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலம் தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு (இயந்திரவியல், தானியியங்கிவியல்) 2019, 2020,2021-ஆம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற தமிழக மாணவா்களிடமிருந்து ஓராண்டு தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.க்ஷா்ஹற்.ள்ழ்ல்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தை பாா்க்கவும். விண்ணப்பம் அக்.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளாா்.