நாகூா் மாடா்ன் மெட்ரிக் பள்ளியில் உலக ஓசோன் தினவிழா
நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி முதல்வா் எல். பென்ட்மேரி தலைமை வகித்தாா். நாகை மாவட்ட தேசிய பசுமைப்படை அலுவலா் முத்தமிழ் ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேசினாா். உலக ஓசோன் தினத்தையொட்டி, பள்ளி மாணவா்களிடையே ஓவியம், கட்டுரை, பேச்சு மற்றும் விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பங்கேற்ற மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. ஆசிரியா்கள் மாணவா்கள் பங்கேற்றனா். நிறைவில், பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் கே. ரகு நன்றி கூறினாா்.